விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஹீரோ’: 4 மொழிகளில் தயாராகிறது!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஹீரோ’: 4 மொழிகளில் தயாராகிறது!
Updated on
1 min read

4 மொழிகளில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்துக்கு ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘காக்கா முட்டை’ படத்துக்கு வசனம் எழுதியவர் ஆனந்த் அண்ணாமலை. மேலும், ‘குற்றமே தண்டனை’ படத்துக்காக மணிகண்டனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதினார். இவர் தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார்.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘ஹீரோ’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது.

ஹீரோயினாக ‘பேட்ட’ படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். முரளி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

வருகிற ஏப்ரல் 22-ம் தேதி புதுடெல்லியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in