வரலட்சுமி நடிக்கும் முதல் தெலுங்குப் படம்

வரலட்சுமி நடிக்கும் முதல் தெலுங்குப் படம்
Updated on
1 min read

முதன்முதலாக தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

சிம்பு ஜோடியாக ‘போடா போடி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இந்தப் படத்தை இயக்கினார். தொடர்ந்து பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ள வரலட்சுமி, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், முதன்முதலாக தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் வரலட்சுமி. இந்தத் தகவலை அவரே ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். சந்தீப் கிஷண் மற்றும் ஹன்சிகா ஆகியோரோடு இணைந்து வரலட்சுமி நடிக்கும் இந்தப் படத்துக்கு ‘தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ., பி.எல்.’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாகேஸ்வர் ரெட்டி இயக்கும் இந்தப் படத்துக்கு, சாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். சேகர் சந்திரா இசையமைக்கிறார்.

‘சர்கார்’ மற்றும் ‘சண்டக்கோழி 2’ படங்களில் வில்லியாக நடித்ததன் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்ற வரலட்சுமி கைவசம் தற்போது ‘வெல்வெட் நகரம்’, ‘கன்னி ராசி’, ‘நீயா 2’, ‘காட்டேரி’, ‘அம்மாயி’ ஆகிய படங்கள் உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in