டீஸரில் சாதனை படைத்த ‘கரிகாடன்’

காடா நடராஜ், நிரிக் ஷா ஷெட்டி
காடா நடராஜ், நிரிக் ஷா ஷெட்டி
Updated on
1 min read

காடா நடராஜ், நிரிக் ஷா ஷெட்டி, மஞ்சு சுவாமி, யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா, கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி உள்பட பலர் நடித்துள்ள படம், ‘கரிகாடன்’. இதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். அதிஷய் ஜெயின் மற்றும் ஷஷாங்க் சேஷகிரி இசை அமைத்துள்ளனர்.

ஜீவன் கவுடா ஒளிப்பதிவு செய் துள்ள இப்படத்தை, ரித்தி என்டர் டெயின்மென்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார். ஆக் ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த பரபரப்பான திரைப்படமான இதை இணைத் தயாரிப்பு செய்திருக்கிறார் ரவிக்குமார் எஸ்.ஆர். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீஸர் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. வெளியான குறுகிய காலத்திலேயே 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in