ரூ.300 கோடி வசூலை கடந்தது ‘மகாவதார் நரசிம்மா’

ரூ.300 கோடி வசூலை கடந்தது ‘மகாவதார் நரசிம்மா’
Updated on
1 min read

இந்தி, கன்னடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ள ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலை கடந்து மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது.

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. ஜூலை 25-ம் தேதி பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதர மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அனிமேஷன் திரைப்படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வரவேற்பைப் பெற்று, வசூலை குவித்தது.

தற்போது ‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் வழங்க கினிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் வரிசையில் தொடர்ச்சியாக பல்வேறு அனிமேஷன் படங்களை உருவாக்க ஹோம்பாளே நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படம் நல்ல வசூல் செய்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், இந்தியாவில் அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியும் இருக்கிறது.

The roar that united the nation

300 Cr+ Worldwide Gross & Counting…
India’s biggest animated blockbuster, #MahavatarNarsimha continues its legendary box office run into its 6th week!#Mahavatar @hombalefilms @AshwinKleem @kleemproduction @VKiragandur @ChaluveGpic.twitter.com/swIBVl0y4x

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in