ரிஷப் ஷெட்டி சம்பளம் ரூ.55 கோடி?

ரிஷப் ஷெட்டி சம்பளம் ரூ.55 கோடி?
Updated on
1 min read

‘காந்தாரா’ படம் மூலம் பான் இந்தியா ஸ்டாராக மாறியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. அவர் இயக்கி நடித்த அந்த கன்னடப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தின் முதல் பாகம் ‘காந்தாரா: சாப்டர் 1’ என்ற பெயரில் இப்போது உருவாகியுள்ளது.

இதையடுத்து ரிஷப் ஷெட்டி, ஜெய்ஹனுமான் என்ற பான் இந்தியா படத்தில் நடிக்கிறார். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தைப் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.

18-ம் நூற்றாண்டில் நடிக்கும் கதையை கொண்ட இந்தப் படத்துக்காக அவருக்கு ரூ.55 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு கன்னட ஹீரோ வாங்கும் அதிகபட்ச சம்பளம் இது. ‘காந்தாரா’ படத்தை இயக்கி நடிக்க ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய ரிஷப் ஷெட்டி, ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்துக்கு ரூ.12 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்கிறார்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in