தமிழில் வெற்றி பெறாத ‘குபேரா’ - இயக்குநர் ஆதங்கம்

தமிழில் வெற்றி பெறாத ‘குபேரா’ - இயக்குநர் ஆதங்கம்
Updated on
1 min read

தமிழில் ‘குபேரா’ போதிய வெற்றி பெறாதது குறித்து இயக்குநர் சேகர் கம்முலா பேசியிருக்கிறார்.

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குபேரா’. அனைத்து மொழிகளிலும் வெளியான இப்படம் தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இப்படத்தினை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

தமிழில் எதிர்பார்த்த வரவேற்பு பெறாதது குறித்து இயக்குநர் சேகர் கம்முலா, “‘குபேரா’ தமிழில் வரவேற்பைப் பெறுவதற்காக தான் காத்திருக்கிறேன். இப்படத்தில் தெலுங்கை விட அதிக தமிழ் உணர்வுகள் இருப்பதாக நினைத்தேன். மேலும், நாயகனாக தனுஷ் நடித்திருக்கிறார். ஆனாலும், தமிழில் ஏன் சரியாக போகவில்லை என்பதை பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் பெற்றுள்ள மாபெரும் வரவேற்பினால், உலகளவில் 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்துவிட்டது ‘குபேரா’ வசூல். குறிப்பாக வட அமெரிக்காவில் வசூல் 2 மில்லியன் டாலர்களை கடந்துவிட்டது. ஆந்திராவில் அதிக வசூல் செய்த தனுஷ் படம் என்ற சாதனையை படைத்திருக்கிறது ‘குபேரா’.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in