‘ரிலீஸ் தாமதமானால் ரூ.10 கோடியை குறைப்போம்’ - குபேரா தயாரிப்பாளரை மிரட்டிய ஓடிடி நிறுவனம்?

‘ரிலீஸ் தாமதமானால் ரூ.10 கோடியை குறைப்போம்’ - குபேரா தயாரிப்பாளரை மிரட்டிய ஓடிடி நிறுவனம்?
Updated on
1 min read

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப், தலிப் தாஹில் உள்பட பலர் நடித்துள்ள படம், ‘குபேரா’. சேகர் கம்முலா இயக்கியுள்ள இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் ஜூன் 20 -ல் வெளியாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை, அமேசான் பிரைம் பெற்றுள்ளது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தாமதமானால் பேசிய தொகையை குறைத்து விடுவதாக பிரைம் வீடியோ நிறுவனம் மிரட்டியதாகத் தயாரிப்பாளர் சுனில் நரங் தெரிவித்துள்ளார்.

“போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்காக, ஓடிடி நிறுவனத்திடம் ஜூலையில் ரிலீஸ் செய்யலாம் என்றேன். அவர்கள், ‘ஒப்பந்தப்படி ஜூன் 20-ம் தேதி படம் வெளியாக வேண்டும். இல்லை என்றால் ஒப்பந்தம் செய்த தொகையில் ரூ.10 கோடி குறைத்து விடுவோம்’ என்று கூறினர். ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அதிகாரத்துக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் விருப்பப்படியே இப்போது எல்லாம் நடக்கிறது” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in