‘Ghaati’ ரிலீஸ் எப்போது? - அமைதி காக்கும் தயாரிப்பு நிறுவனம்

‘Ghaati’ ரிலீஸ் எப்போது? - அமைதி காக்கும் தயாரிப்பு நிறுவனம்
Updated on
1 min read

‘Ghaati’ படம் எப்போது வெளியீடு என்பது தெரியாமல் இருக்கிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமும் அமைதி காத்து வருகிறது. கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Ghaati’. ஏப்ரல் 18-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது வரை படத்தின் டீசர், விக்ரம் பிரபு அறிமுக டீஸர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், ஏப்ரல் 18-ம் தேதி திட்டமிடப்பட்டி ‘Ghaati’ வெளியாகவில்லை.

இதன் புதிய வெளியீட்டு தேதி குறித்தும் படக்குழு அமைதி காத்து வருகிறது. இப்படத்தினை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பான் இந்தியா முறையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். பட வெளியீட்டில் என்ன சிக்கல் உள்ளிட்ட எந்தவொரு தகவலையுமே படக்குழு வெளியிடவில்லை.

அனுஷ்கா நீண்ட வருடங்கள் கழித்து நடித்துள்ள படம் ‘Ghaati’ என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. தற்போது தயாரிப்பு நிறுவனத்தின் இந்த அமைதி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in