பிரபாஸ் படத்தை இயக்கும் ‘ஹனுமன்’ இயக்குநர் பிரசாந்த் வர்மா 

பிரபாஸ் படத்தை இயக்கும் ‘ஹனுமன்’ இயக்குநர் பிரசாந்த் வர்மா 

Published on

பிரபாஸ் – பிரசாந்த் வர்மா கூட்டணி இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள்.

பாலையாவின் மகன் நாயகனாக நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் ‘ஹனுமன்’ இயக்குநர் பிரசாந்த் வர்மா. அப்படம் பல்வேறு காரணங்களால் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளார் பிரசாந்த் வர்மா. இந்தக் கூட்டணி படத்தினை ஹோம்பளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான டெஸ்ட் ஷூட் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. ஆனால், படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக சில மாதங்கள் ஆகும் என்கிறார்கள்.

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் வெளியான ‘ஹனுமன்’ திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்கள் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார்கள். முதலில் ரன்வீர் சிங் நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் பிரசாந்த் வர்மா. அப்படம் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அக்கதையினை தான் பிரபாஸை வைத்து இயக்கவுள்ளாரா அல்லது வேறொரு புதிய கதையா என்பது விரைவில் தெரியவரும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in