இந்தியில் ரீமேக் ஆகிறது ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’
Updated on
1 min read

இந்தியில் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ படத்தை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’. இதனை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. இதில் வெங்கடேஷ் கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மார்ச் 1-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’, அதே நாளில் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெளியான ‘சங்கிராந்திக்கி வஸ்துணம்’ படத்தில் வெங்கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆக்‌ஷனும் எமோஷனும் கலந்த திரைக்கதையுடன் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in