இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பேபி’!

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘பேபி’!
Updated on
1 min read

‘பேபி’ திரைப்படம் இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது. பிரபல தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த படம் ‘பேபி’.

இதில் வைஷ்ணவி சைதன்யா நாயகியாக நடித்திருந்தார். சாய் ராஜேஷ் நீலம் எழுதி இயக்கிய இப்படத்துக்கு விஜய் பல்கனின் இசை அமைத்திருந்தார். ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.90 கோடி வசூலித்தது.

இதன் ரீமேக் உரிமைக்கும் கடும் போட்டி நிலவியது. தமிழ் ரீமேக்கை ஞானவேல்ராஜா கைப்பற்றினார். தற்போது இதன் இந்தி ரீமேக்கும் உறுதியாகி இருக்கிறது. இதில் ஆனந்த் தேவரகொண்டா கதாபாத்திரத்தில் மறைந்த இர்ஃபான் கானின் மகன் பாபில் கான் நடிக்கவுள்ளார். நாயகியாக நடிக்க கீர்த்தி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

மது மண்டேனா, கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்ரீனிவாசா குமார் நாயுடு ஆகியோர் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள். தெலுங்கு படத்தினை இயக்கிய சாய் ராஜேஷ் இந்தி ரீமேக்கையும் இயக்கவுள்ளார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in