கைவிடப்பட்டதா ‘டாக்சிக்’? – வைரலாகும் பதிவுகள்

கைவிடப்பட்டதா ‘டாக்சிக்’? – வைரலாகும் பதிவுகள்
Updated on
1 min read

யஷ் நடித்து வரும் ‘டாக்சிக்’ திரைப்படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் பதிவுகள் வைரலாகி வருகின்றன. ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, யஷ் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘டாக்சிக்’. கீது மோகன்தாஸ் இயக்கி வரும் இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுட்டேரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

பல மாதங்களாக ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனிடையே, தற்போது இணையத்தில் ‘டாக்சிக்’ படம் கைவிடப்பட்டதாக பலரும் பகிர்ந்து வருகிறார்கள். இது தொடர்பாக படக்குழுவினரும் எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.

‘டாக்சிக்’ படப்பிடிப்பு தாமதமாக தொடங்கப்பட்டு இருப்பதால், ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு இருக்காது என்பது தெளிவாகிவிட்டது. இதனால், அந்த தேதியில் பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை வைத்தே பலரும் ‘டாக்சிக்’ படம் கைவிடப்பட்டதாக வதந்திகளை பரப்பி வருவதாக தெரிகிறது. தற்போதைய சூழலில் அடுத்த ஆண்டு இறுதியில் தான் ‘டாக்சிக்’ படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in