சத்ய தேவின் ‘ஜீப்ரா’ தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிப்பு

சத்ய தேவின் ‘ஜீப்ரா’ தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: சத்ய தேவ், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பான் இந்தியா படமான ‘ஜீப்ரா’ (ZEBRA) திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் சத்ய தேவ் நடிக்கும் திரைப்படம் ‘ஜீப்ரா’. இந்தப் படத்தில் தாலி தனஞ்செயா, பிரியா பவானி சங்கர், ஜெனிஃபர் பிசினாடோ, சுனில், சத்யராஜ், கருடா ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி பான் இந்தியா முறையில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிறைவடைந்தது. அதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைப்பெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in