படப்பிடிப்பில் விபத்து: ஊர்வசி ரவுதெலாவுக்கு எலும்பு முறிவு

படப்பிடிப்பில் விபத்து: ஊர்வசி ரவுதெலாவுக்கு எலும்பு முறிவு
Updated on
1 min read

இந்தி நடிகை ஊர்வசி ரவுதெலா, தமிழில் சரவணன் அருள் நடித்த ‘லெஜண்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் இவர் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். இப்போது பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணாவின் 109 -வது படமான இதை பாபி இயக்குகிறார். பாபி தியோல் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

இதன் சண்டைக் காட்சி படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் ஊர்வசிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக, அவரை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in