பிரபாஸை இயக்குகிறார் ‘சீதாராமம்’ இயக்குநர்

பிரபாஸை இயக்குகிறார் ‘சீதாராமம்’ இயக்குநர்
Updated on
1 min read

ஹைதரபாத்: துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா நடித்து, கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘சீதாராமம்’. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான இந்த காதல் கதை வரவேற்பைப் பெற்றது. இதை தெலுங்கு இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கி இருந்தார். இவர், அடுத்து இயக்கும் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

இதுபற்றி தெரிவித்துள்ள ஹனு ராகவபுடி, “வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் ஆக்‌ஷன் கதையை படமாக்குகிறேன். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். 3 பாடல்கள் ரெடியாகிவிட்டன.’’ என்று கூறியுள்ளர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in