‘கல்கி 2898’ படத்தில் மிருணாள் தாக்குர்?

‘கல்கி 2898’ படத்தில் மிருணாள் தாக்குர்?
Updated on
1 min read

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ரிலீசாகவுள்ளது.அறிவியல் புனைகதையான இந்தப் படத்தின் அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு வரும் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது.

மே மாதம் 9-ம் தேதி வெளியாக இருக்கும் இதில் சில முன்னணி நடிகர்கள் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா ஆகியோர் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில்,மிருணாள் தாக்குரும் கவுரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in