25 நாளில் ரூ.300 கோடி வசூலித்த ‘ஹனுமான்’

25 நாளில் ரூ.300 கோடி வசூலித்த ‘ஹனுமான்’
Updated on
1 min read

தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அம்ரிதா ஐயர் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ஹனுமான்’. ஜன. 12-ம் தேதி தெலுங்கு, இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப்படம் வெளியானது.

பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பாக கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்த இந்தப் படத்துக்கு வெளியான முதல் நாளில் இருந்தே இந்தி, தெலுங்கில் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி 25 நாளில் உலகம் முழுவதும் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in