ஜோதிட காரணங்களுக்காகவே ‘சலார்’ ரிலீஸ் தேதி மாற்றம்: தயாரிப்பாளர் தகவல்

ஜோதிட காரணங்களுக்காகவே ‘சலார்’ ரிலீஸ் தேதி மாற்றம்: தயாரிப்பாளர் தகவல்
Updated on
1 min read

ஹைதராபாத்: ‘கே.ஜி.எஃப்’ படங்களுக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், 'சலார்'. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி, ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையை கொண்ட இந்தப் படம், 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது.

இந்தப் படத்தின் வெளியீடு ஜோதிட காரணங்களுக்காகவே தள்ளி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தெரிவித்துளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “ உண்மைதான். நாங்கள் எங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ரிலீஸ் தேதியை அறிவித்தோம். கடந்த பல வருடங்களாக இந்த முறையில்தான் எங்கள் தேதிகளைத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்திலும் ஜோதிட அடிப்படையிலேயே ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதனடிப்படையில்தான் சலார் ரிலீஸ் தேதியை டிச.22 என்று அறிவித்தோம்” என தெரிவித்துள்ளார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in