போலீஸ் அதிகாரியாக காஜல் அகர்வால்

போலீஸ் அதிகாரியாக காஜல் அகர்வால்
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்திருந்த ‘பகவந்த் கேசரி’, அக். 19ம் தேதி வெளியானது. கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் ‘சத்தியபாமா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தை சுமன் சிக்கலா இயக்குகிறார். போலீஸ் உடையில் காஜல் அகர்வால் தோன்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே விஜய்யின் ‘ஜில்லா’ படத்தில் போலீஸ் வேடத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in