டிசம்பரில் தொடங்குகிறது ‘காந்தாரா 2’

டிசம்பரில் தொடங்குகிறது ‘காந்தாரா 2’
Updated on
1 min read

பெங்களூரு: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து இயக்கிய படம், ‘காந்தாரா’. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகி ரூ.400 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது.

இந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இந்தப் படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது. அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு முடிவடையும். முதல் பாகத்தை விட மெகா பட்ஜெட்டில் உருவாகும் இதில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக ரிஷப் ஷெட்டி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in