பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில்  கிச்சா சுதீப் நடிக்கும் பான் இந்தியா படம்

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில்  கிச்சா சுதீப் நடிக்கும் பான் இந்தியா படம்
Updated on
1 min read

‘ஆர்ஆர்ஆர்’ பட எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் கைவண்ணத்தில் உருவாகும் பான் இந்தியா படத்தில் கிச்சா சுதீப் நடிக்கிறார். கிச்சா சுதீப் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஆர்.சந்துரு இயக்கத்தில் கிச்சா சுதீப் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ படங்களின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் இப்படத்தின் திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். ஆர்சி ஸ்டுடியோஸ் படத்தை தயாரிக்கிறது. விரைவில் படத்தின் டைட்டில் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் வெளியாக உள்ளன.

முன்னதாக சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இது கிச்சா சுதீப்பின் 47ஆவது படமாக உருவாக உள்ளது. அவரின் பிறந்த நாளையொட்டி இந்த இரண்டு பட அறிவிப்புகளும் இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in