மந்திரவாத கதையில் அனுஷ்கா ஷெட்டி

மந்திரவாத கதையில் அனுஷ்கா ஷெட்டி
Updated on
1 min read

கொச்சி: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா, மூன்று வருட இடைவெளிக்கு பிறகு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார். படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் மலையாளத்தில் உருவாகும் மந்திரவாதக் கதையில் அவர் நடிக்கிறார். ‘காத்தனார்’என்ற இந்தப் படத்தை ரோஜின் தாமஸ் இயக்குகிறார். ஜெயசூர்யா நாயகனாக நடிக்கிறார்.

அமானுஷ்ய சக்திகளைக் கொண்டவர் என்று நம்பப்படும் கேரள பாதிரியாரான ‘கடமடத்து காத்தனார்’கதைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. ஜெயசூர்யாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியான இதன் கிளிம்ப்ஸ் வீடியோ, வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 பாகங்களாக உருவாகும் இதன் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட 7 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் இந்தியத் திரைப்படம் இது என்று கூறப்படுகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in