ராவணனாக நடிக்க நடிகர் யாஷ் மறுப்பு

ராவணனாக நடிக்க நடிகர் யாஷ் மறுப்பு

Published on

‘கே.ஜி.எஃப்’ படங்கள் மூலம் பிரபலமான கன்னட நடிகர் யாஷ், தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் நிலேஷ் திவாரி இயக்கும் ராமாயணக் கதையை கொண்ட படத்தில் ராவணனாக அவர் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்தச் செய்தியை யாஷ் தரப்பில் மறுத்துள்ளனர்.

“இந்த கதாபாத்திரத்தில் நடிக்க யாஷ் விருப்பமாக இருந்தார். ராமனாக நடிப்பதை விட ராவணனாக நடிப்பது சவாலானது என்பதால் ஆர்வமாக இருந்தார். ஆனால், அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதை அவர் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் யாஷ் அதில் நடிக்கவில்லை” என்று அவர் குழு தெரிவித்துள்ளது.

நடிகர் யாஷ் ஏற்கெனவே அளித்த பேட்டியில், “ரசிகர்களிடம் கவனமாக இருக்க விரும்புகிறேன். அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்கள். அவர்களின் விருப்பத்துக்கு மாறாக நான் நடித்தால் அவர்கள் அதிகம் எதிர்வினையாற்றுவார்கள்” என்று கூறியிருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in