மும்பை லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி பெயர்!

மும்பை லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி பெயர்!
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்ற ஸ்ரீதேவி, அங்கு குளியலறையில் தவறி விழுந்து மரணமடைந்தார்.

இந்நிலையில், ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாகவும் அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்புக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக்' என பெயரிடுவதாக அறிவித்திருந்தது. இந்தப் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில்தான் ஸ்ரீதேவி வசித்து வந்தார்.

இதன் பெயர் பலகைத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. போனி கபூர் திறந்து வைத்து ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வணங்கினார். அவரது மகள் குஷி கபூர், மூத்த நடிகை ஷபானா ஆஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in