Published : 27 Jun 2023 05:37 AM
Last Updated : 27 Jun 2023 05:37 AM

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் 9: டைட்டிலை வென்றார் அருணா

சென்னை: விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர் 9’ இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. 5 போட்டியாளர்களான அருணா, அபிஜித், பிரியா ஜெர்சன், பிரசன்னா மற்றும் பூஜா ஆகியோர், ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்கள் முன்னிலையில் பாடல்களைப் பாடினர்.

கடும் போட்டிக்கு மத்தியில், வெற்றியாளராக அருணா அறிவிக்கப்பட்டார். அவர் ‘சூப்பர் சிங்கர் சீசன் 9’ பட்டத்தை வென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கமும் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக வழங்கப்பட்டது. பிரியா ஜெர்சன் 2-ம் இடத்தைப் பெற்று ரூ.10 லட்சம் ரொக்கம் பெற்றார். 3-ம் இடம் பிடித்த பிரசன்னாவுக்கு ரூ.5 லட்சமும் கிடைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x