அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார்?

நடிகர் டேனியல் கிரேக்

நடிகர் டேனியல் கிரேக்

Updated on
1 min read

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகருக்​கான தேடல் தொடங்​கி​விட்​ட​தாக அமே​சான் எம்​.ஜி.எம் ஸ்டூடியோஸ் அறி​வித்​துள்​ளது.

பிரபல நடிகர் டேனியல் கிரேக் தொடர்ந்து 5 ஜேம்​ஸ்​பாண்ட் படங்களில் நடித்​துள்​ளார். பாண்ட் பட வரிசை​யின் 25-வது படமான ‘நோ டைம் டு டை’, கடந்த 2021-ம் ஆண்டு டேனியல் கிரேக்​கின் கடைசி பாண்ட் படமாக வெளி​யானது. இனி, பாண்ட் கேரக்​டரில் நடிக்​கப் போவ​தில்லை என்று அவர் அறிவித்துவிட்டார்.

இதனால் அடுத்த ஜேம்​ஸ்​ பாண்ட் யார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்​துள்​ளது. நடிகர்​கள் இட்​ரிஸ் எல்​பா, டாம் ஹாலண்ட், ஆரோன் டெய்​லர்​- ஜான்​சன், ஜேக்​கப் எலார், காலம்டர்​னர் ஆகியோரில் ஒரு​வர் பாண்ட் கதா​பாத்​திரத்​தில் நடிக்​கலாம் என செய்​தி​கள் வெளி​யா​யின. ஆனால், இது​வரை அது உறுதி செய்யப்பட​வில்​லை.

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் திரைப் ​படத்தை ‘டூன்’ வரிசைப் படங்களை இயக்​கிய டெனிஸ் வில்​லெனுவ் இயக்க இருக்​கிறார். இதற்​கிடையே ஜேம்ஸ் பாண்ட் கதா​பாத்​திரத்​துக்​கான தேர்​வு​கள் அதி​காரப் பூர்​வ​மாகத் தொடங்​கி​யுள்​ளன. இதற்​காக ‘கேம் ஆஃப் த்ரோன்​ஸ்’ தொடரின் காஸ்​டிங் இயக்​குநர் நினா கோல்​டை, அமே​சான் எம்​.ஜி.எம் ஸ்டூடியோஸ் நியமித்​துள்​ளது. “அடுத்த ஜேம்ஸ் பாண்​டுக்​கான தேடல் தொடங்​கி ​விட்​டது. சரி​யான நேரம் வரும்போது 007 ரசிகர்​களு​டன் கூடு​தல் செய்​தி​களைப் பகிர்ந்து கொள்ள உள்​ளோம்” என்று அந்​நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p><em>நடிகர் டேனியல் கிரேக்</em></p></div>
Gangubai Kathiawadi: கருப்பு ரோஜாக்களின் உரிமைக் குரல் கங்குபாய் | திரை தேவதைகள் 17

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in