‘த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ்’ - 1946: ஆசை, பேராசை, காதல், குற்றம்! | ஹாலிவுட் மேட்னி 22

‘த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ்’ - 1946: ஆசை, பேராசை, காதல், குற்றம்! | ஹாலிவுட் மேட்னி 22
Updated on
3 min read

செய்த கொலைக்​காகத் தப்​பித்​தவன் செய்​யாத கொலைக்​காகத் தண்​டிக்​கப்​படு​வதே ‘த போஸ்ட்மேன் ஆல்​வேஸ் ரிங்ஸ் ட்வைஸ்’ (The Postman Always Rings Twice – 1946) என்ற திரைப்​படத்​தின் ஒரு​வரிக்​கதை. சான் ஃபி​ரான்​சிஸ்​கோ​வில் இருந்து சான் டியாகோவுக்கு லிப்ட் கேட்டு காரில் பயணிக்​கும் ஃபி​ராங்க் சேம்​பர்ஸ் என்​கிற நாடோடி இளைஞனை சாலை​யோர உணவக​மான ‘ட்​வின் ஓக்​ஸ்’ முன் இறக்கி விடு​கிறார் மாவட்ட வழக்​கறிஞர் கைல் சேக்​கெட்.

உணவக உரிமை​யாளர் நிக் ஸ்மித் அவனை உற்​சாக​மாக வரவேற்று அங்​கேயே தங்கி வேலை பார்க்​கச் சொல்​கிறார். எப்​போதும் லிப்​ஸ்​டிக்​கும் உதடு​மாக இருக்​கும் நிக்​கின் இளம் மனைவி கோரா ஸ்மித்தை அங்கு சந்​திக்​கிறான் ஃபி​ராங்க்.

ஆரம்​பத்​தில் கோரா​வுக்கு அவனைப் பிடிக்​க​வில்​லை. வேலையை விட்டு அனுப்ப நினைக்​கிறாள். கணவன் அதற்கு ஒப்​புக் கொள்​ள​வில்​லை. ஃபி​ராங்​கிற்கு வேலை கொடுப்​ப​தற்​காக அங்​குள்ள நாற்​காலிகளுக்கு வண்​ணம் பூசச் சொல்​கிறாள். ஃபி​ராங்க் அவளை இறுகப் பற்றி அவள் இதழில் வண்​ணம் பூசி விடு​கிறான்.

எந்த பதற்​ற​மும் இல்​லாமல் சாயம் கலைந்த உதடு​களை லிப்​ஸ்​டிக்​கால் சரி செய்​கிறாள் கோரா. அந்த நொடியி​லிருந்து அவர்​களுக்​குள் ஈர்ப்பு உரு​வாகிறது. தன்னை காதலிக்​காத ஒரு​வனுடன் திரு​மணம் செய்து கொண்டு வாழ்​வதும், தாங்​களே சொந்​த​மாக நடத்​தும் உணவகத்​தில் வேலை செய்​வதும் கோரா​வுக்​குப் பிடிக்​க​வில்​லை.

கணவனை கடற்​கரைக்கு நீச்​சலுக்கு அழைக்க அவன் மறுக்க, ஃபி​ராங்க் அவளு​டன் சென்று நீச்​சலடிக்​கிறான். கணவன் மறுக்​கும் இடத்​துக்​கெல்​லாம் ஃபி​ராங்க் உடன்வர, நாளடை​வில் இரு​வரும் காதல் வயப்​பட்டு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு நகரை​விட்டு ஓடு​கிறார்​கள்.

புது இடங்​களில்​அலை​யும்​போது​தான் கோரா​வுக்கு கோர​மான உண்மை புலப்​படு​கிறது. நிக்கை விவாகரத்து செய்​தால் தனக்கு எது​வுமே கிடைக்​காது என்​பதை உணர்ந்​தவள், ஃபி​ராங்கை அழைத்​துக் கொண்டு மீண்​டும் ‘ட்​வின் ஓக்​ஸ்’ உணவகத்​துக்கே திரும்​பு​கிறாள். தான் எழுதி வைத்த கடிதத்தை நிக் படிப்​ப​தற்கு முன்பே லாவக​மாக எடுத்​து​விடு​கிறாள்.

அதன்​பின்​னர் கோரா, ஃபி​ராங்​குக்கு ஓர் அதிர்ச்​சி​யான திட்​டத்​தைச் சொல்​கிறாள். பல விபத்​துகள், வீடு​களின் குளியலறை​யில் நடப்​ப​தாக அவள் பத்​திரி​கை​களில் படித்​திருக்​கிறாள். அதைப் போலவே நிக்​கைக் கொலை செய்து விபத்​தாகக் காட்​டலாம் என்​கிறாள். முதலில் தயங்​கி​னாலும், அவள் மீதுள்ள ஈர்ப்​பால் சம்​ம​திக்​கிறான் ஃபி​ராங்க். ஒரு சாக்​ஸில் இரும்​புப் பந்​துகளை நிரப்பி நிக்​கின் தலை​யில் அடித்து மயக்​கி, குளியலறை​யில் அவர் விழுந்து இறந்​த​தாகக் காட்ட வேண்​டும் என்​பதே திட்​டம்.

ஆனால் விஷ​யங்​கள் திட்​ட​மிட்​டபடி நடக்​க​வில்​லை. ஒரு போலீஸ் அதி​காரி அங்கு வரு​வதும், ஒரு பூனை மின்​சா​ரத்​தைத் துண்​டிக்​கச் செய்​வதும் சூழ்​நிலையை மாற்றி விடு​கின்​றன. ஆனாலும் இருட்​டில் கோரா நிக்​கின் தலை​யில் பலமாக அடித்து காயப்​படுத்​துகிறாள். நிக் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று உயிர் தப்​பிக்​கிறார். நடந்த சம்​பவங்​கள் அவருக்கு நினை​வில் இல்​லை.

மருத்​து​வ​மனையி​லிருந்து மீண்டு வரும் நிக், அந்த உணவகத்தை விற்​று​விட்டு கனடா செல்​லப் போவ​தாக​வும். அங்கு பக்​க​வாதத்​தால் பாதிக்​கப்​பட்​டிருக்​கும் தன் சகோ​தரியை கோரா பராமரிக்க வேண்​டும் என்​றும் குண்​டைத் தூக்​கிப் போடு​கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்த கோரா, தற்​கொலைக்கு முயற்​சிக்​கிறாள். தடுக்​கும் ஃபி​ராங்க், வேறு வழி​யின்றி நிக்​கைக் கொல்​லச் சம்​ம​திக்​கிறான். கோரா​வின் திட்​டப்​படி மூவரும் காரில் பயணிக்​கும்​போது, குடி​போதை​யில் கார் விபத்து ஏற்​பட்​டது போலச் சித்​தரித்து நிக்​கின் காரை மலை உச்​சியி​லிருந்து தள்ளி விடு​கிறான் ஃபி​ராங்க்.

முதல்​முறை தப்​பித்​தவனை 2-ம் முறை கொன்று விடு​கிறார்​கள். அதன்​பின் நடக்​கும் பரபரப்​பான சம்​பவங்​களை விவரிப்​பதே இப்​படம். அப்​போதைய தணிக்கை விதி​முறை​களால் ஜேம்ஸ் எம்​.கெய்ன் எழு​திய இந்த நாவலைப் படமாக்க முடி​யாமல் ஹாலிவுட்டே தயங்​கிய​போது, எம்ஜிஎம் நிறு​வனம் முன் வந்​தது. திரைக்​கதை ஆசிரியர்​கள் ஹாரி ரஸ்​கின் மற்​றும் நிவன் புஷ் நாவலில் இருந்த மிரு​கத்​தன​மான பாலியல் ஈர்ப்​பை, திரை​யில் ‘வசீகர​மான ஆபத்​தாக’ மாற்​றி, ‘கண்​ணி​ய​மான கிரிமினல் முலாம்’ பூசி​னார்​கள்.

இயக்​குநர் ‘டே கார்​னெட்’ இப்​படத்​தைக் கையாண்ட விதம், இதற்கு ஒரு ‘கிளாசிக்’ அந்​தஸ்​தைப் பெற்​றுத் தந்​தது. லிப்​ஸ்​டிக் உருண்டு ஓடு​வது, அதைத் தொடர்ந்து கேம​ரா, லானா டர்​னரின் கால்​களி​லிருந்து முகம் வரை செல்​லும் அந்த அறி​முகக் காட்​சி​யிலேயே, கதா​நாயகன் மட்​டுமன்றி பார்​வை​யாளர்​களும் அவர் வசப்​படப்​போகிறார்​கள் என்​பதை உறு​திப்​படுத்​துகிறார்.

கோரா என்ற கதா​பாத்​திரத்​தில் லானா டர்​னர் அளித்த கவர்ச்​சி​யும் அபாயகர​மும் கலந்த நடிப்பு உலகப்​பு​கழ் பெற்​றது. “வெள்ளை நிறம் தூய்​மை​யின் அடை​யாளம்” என்ற பொதுப்​புத்​தி​யைப் பயன்​படுத்​தி, ஒரு கொலை​யாளியைத் தேவதையைப் போலக் காட்​டியது பாத்​திரப் படைப்​பில் மிகப்​பெரிய முரண்​பாட்டை உரு​வாக்​கியது.

ஜான் கார்​பீல்ட் ஓர் இருண்ட நாயக​னாகத் தோன்​றி, ஒரு சாதாரண மனிதன் பேராசை​யால் குற்​ற​வாளி​யாக மாறும் மனநிலையை மிக இயல்​பாக வெளிப்​படுத்​துகிறார்.

கோரா மீது கணவனைக் கொன்​றது, காதலனைக் கொல்ல முயற்​சித்​தது என்று இரட்டை வழக்​குப் போடும் கைல் சேக்​கெட்​டாக வரும் லியோன் ஏம்​ஸ், ஃபி​ராங்கை நன்​றாகக் குழப்பி காதலியை எதிரி​யாக்​கு​கிறார்.

கோரா​வின் வழக்​கறிஞர் ஆர்​தர் கீட்​ஸாக வரும் ஹியூம் குரோனின், சட்ட ஓட்​டைகளைப் பயன்​படுத்தி விடு​தலை வாங்​கித்​தரும் கதா​பாத்​திரத்தை அற்​புத​மாகக் கையாண்​டிருக்​கிறார். சிரிப்​பும் குடி​யு​மாக வரும் அப்​பாவி கணவன் நிக்​காக, செசில் கெல்​லவே ரசிக்க வைக்​கிறார். கருப்​பு-வெள்ளை ஒளிப்​ப​தி​வில் ஹாரி ஸ்ட்​ராட்​லிங் உரு​வாக்​கிய நிழல்​கள், குற்​ற​வாளி​களைப் படம் பிடிக்​க​வில்​லை; அவர்​களின் குற்ற உணர்ச்​சி​யைப் படம் பிடித்​தன.

ஜார்ஜ் பாஸ்​மேனின் இசை மற்​றும் ஜார்ஜ் வைட்​டின் எடிட்​டிங் ஆகியவை இணைந்​து, “விதி நெருங்​கிக்​கொண்​டிருக்​கிறது” என்ற பதற்​றத்​தைப் படம் முழு​வதும் உணர்த்​துகின்​றன. குற்​ற​வாளி​கள் தண்​டிக்​கப்​பட்டே தீர வேண்​டும் என்ற அன்​றைய தணிக்கை விதி​முறை​களுக்​கேற்ப, ஃபி​ராங்​கும் கோரா​வும் சேர்ந்து வாழ முற்​படும்​போது கார் விபத்​தில் கோரா உயி​ரிழக்​கிறாள்.

ஃபி​ராங்​குக்கு மரண தண்​டனை விதிக்​கப்​படு​கிறது. மனித ஆசை, பேராசை, காதல் மற்​றும் குற்​றம் ஆகியவை மனிதனை எவ்​வாறு அழி​வின் பாதைக்கு இட்​டுச் செல்​கின்றன என்​ப​தைக் காட்​டும் ஆழமான மனோதத்​து​வப் படமாக இது தி​கழ்​கிறது. இந்​தப் படைப்​பு, அடுத்து வந்த பல குற்​றப்​படங்​களுக்​குப்​ பாதையமைத்​துக்​ கொடுத்​தது. போஸ்ட்மேன்​ கதவைத்​ தட்​டும்​ (?) மதி​யவேளை​களில்​ இப்​படத்​தைத்​ தா​ராள​மாகப்​ பார்க்​கலாம்​!

(செவ்​வாய்​தோறும்​ படம் பார்க்கலாம்)

‘த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ்’ - 1946: ஆசை, பேராசை, காதல், குற்றம்! | ஹாலிவுட் மேட்னி 22
‘ஸ்கார் ஃபேஸ்’ 1932 - நவீன கேங்ஸ்டர் படங்களின் பாடப்புத்தகம் | ஹாலிவுட் மேட்னி 21

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in