

இயக்குநர் சக் ரஸ்ஸல்
பிரபல ஹாலிவுட் இயக்குநர் சக் ரஸ்ஸல் காலமானார். அவருக்கு வயது 74.
ஜிம் கேரி நடித்து சூப்பர் ஹிட்டான ‘த மாஸ்க்’, அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் நடித்த ‘எரேசர்’, கெவின் தில்லோன் நடித்த ‘த பாப்’, டுவெய்ன் ஜான்சன் நடித்த ‘த ஸ்கார்பியன் கிங்’, புரூஸ் வில்ஸ் நடித்த ‘பாரடைஸ் சிட்டி’, உள்பட ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சக் ரஸ்ஸல். கடைசியாக ‘விட்ச்போர்டு’ (2024) என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இவர் இந்தியில், வித்யூத் ஜாம்வால் நடித்த ‘ஜங்கிலீ’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். ஜிம் கேரி, நடிகை கேமரன் டையஸ் ஆகியோரை ‘த மாஸ்க்’ படம் மூலம் உலகப் புகழ்ப் பெறச் செய்தவர் சக் ரஸ்ஸல். ‘த ஸ்கார்பியன் கிங்’ மூலம் டுவெய்ன் ஜான்சனை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய வரும் இவர்தான்.
அமெரிக்காவின் சான் டியாகோவில் வசித்து வந்த அவர் காலமானார். ஹாரர், அதிரடி மற்றும் ஃபேண்டஸி திரைப்படங்களில் தனித்துவமான பாணியை உருவாக்கிய சக் ரஸ்ஸலின் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.