‘தி பிக் ஸ்லீப்’ - 1946: நோபல் பரிசு பெற்றவர் எழுதிய திரைக்கதை! | ஹாலிவுட் மேட்னி 25

‘தி பிக் ஸ்லீப்’ - 1946: நோபல் பரிசு பெற்றவர் எழுதிய திரைக்கதை! | ஹாலிவுட் மேட்னி 25
Updated on
2 min read

சாதாரண மிரட்​டல் விசா​ரணைக்​காக அழைக்​கப்​படும் துப்​பறி​வாளன், ஒரு பணக்​கார குடும்​பத்​தின் இருண்ட ரகசி​யங்​களி​லும் தொடர்ச்​சி​யான கொலைகளி​லும் சிக்​கிக்​கொள்​வதே ‘தி பிக் ஸ்லீப்’ (THE BIG SLEEP -1946). லாஸ் ஏஞ்​சல்​ஸின் புகழ்​பெற்ற துப்​பறி​வாள​ரான பிலிப் மார்​லோ, நோயாளி ஜெனரல் ஸ்டெர்ன்​வுட்​டின் மாளி​கைக்கு அழைக்​கப்​படு​கிறார்.

ஜெனரலின் இளைய மகள் கார்​மென், தனது சூதாட்​டக் கடனுக்​காகப் புத்தக வியா​பாரி கெய்​க​ரால் மிரட்​டப் படு​வதை விசா​ரிப்​பதே மார்​லோ​வின் பணி. வழக்கை ஏற்று வெளியே வரும் மார்​லோவை, மூத்த மகள் விவியன் சந்​திக்​கிறாள். கடந்த ஒரு மாத​மாக மாய​மான தன் தந்​தை​யின் நண்​பன் ஷான் ரீக​னைத் தேடத்​தான் அப்பா மார்​லோவை அழைத்​திருப்​பாரோ? என்று அவள் சந்​தேகிக்​கிறாள்.

கெய்​கரின் புத்​தகக் கடைக்​குச் செல்​லும் மார்​லோ, அது சட்​ட​விரோதத் தொழில் நடக்​கும் இடம் என உணர்ந்து கெய்​கரை அவர் வீடு வரை பின்​தொடர்​கிறார். திடீரென துப்​பாக்​கிச் சத்​தம்.

மார்லோ உள்ளே நுழைந்​தால் கெய்​கர் பிண​மாகக் கிடக்​கிறார். கார்​மென் போதை மயக்​கத்​தில் இருக்​கிறார். கார்​மெனை விவியனிடம் ஒப்​படைத்து விட்டு மார்லோ திரும்பி வந்து பார்க்​கை​யில், கெய்​கரின் உடல் அங்கு இல்​லை.

அடுத்த நாள், ஸ்டெர்ன்​வுட் குடும்ப கார் ஓட்​டுநர் ஓவன் டெய்​லர், கடலில் இருந்து சடல​மாக மீட்​கப்​படு​கிறார். இதற்​கிடை​யில், கார்​மெனின் ஆபாசப் புகைப்படங்​களை வைத்து ஒரு கும்​பல் மிரட்​டு​வ​தாக மார்​லோ​விடம் முறை​யிடு​கிறாள் விவியன்.

விசா​ரணை​யில், சூதாட்​டக்​காரன் ஜோ ப்ரோடி அந்​தப் புகைப்​படங்​களை ஓவன் டெய்​லரிட​மிருந்து பறித்​து, தன் காதலி ஆக்​னஸ் மூலம் மிரட்​டிய​வன் என்​பது தெரிய​வரு​கிறது. விசா​ரணை நடக்​கும்​போதே கெய்​கரின் டிரைவர் கரோல், ஜோ ப்ரோடியைச் சுட்​டுக் கொல்​கிறான்.

மார்லோ அவனைக் கைது செய்ய உதவு​கிறார். விவியன் மூலம் ஷான் ரீக​னுக்​கும், கேங்​ஸ்​டர் எடி மார்​ஸின் மனைவி மானோவுக்​கும் தொடர்பு இருப்​பதை மார்லோ அறிகிறார். எடி மார்​ஸின் சூதாட்ட விடு​திக்​குச் சென்று மானோ​வும் ஷான் ரீக​னும் ஓடிப்​போனது பற்றி விசா​ரிக்​கை​யில் எடி மார்ஸ் ஆத்​திர மடைகிறான்.

பிறகு ஹாரி என்​பவன் மூலம் ஆக்​னஸைச் சந்​திக்​கும் மார்​லோ, மானோ மறைந்​திருக்​கும் இடத்​தைக் கண்​டறிகிறார். ஆனால், மார்​ஸின் ஆள் கனினோ, ஹாரியை விஷம் கொடுத்​துக் கொல்​கிறான்.

ரியலிட்டோ என்ற இடத்​தில் மானோவைச் சந்​திக்​கும் மார்​லோ, ஷான் ரீகன் மானோவுடன் ஓடிப்​போக​வில்​லை, அது எடி​யால் கிளப்பி விடப்​பட்ட கதை என்​பதைஅறிகிறார்.

ஷான் ரீகனை விரும்​பிய கார்​மென், தன்னை நிராகரித்த அவனை போதை​யில் கொன்று விட்​டாள். இந்த ரகசி​யத்தை வைத்தே எடி மார்​ஸ், விவியனை மிரட்டி பணம் பறித்து வந்​திருக்​கிறான். இறு​தி​யில், எடி மார்ஸை கெய்​கரின் இடத்​துக்கே வரவழைத்து ஒரு பொறி​யில் சிக்க வைக்​கிறார் மார்​லோ.

அங்​கிருந்து தப்​பிக்க முயலும் எடி மார்​ஸ், சொந்த ஆட்​களாலேயே சுட்​டுக் கொல்​லப்​படு​கிறான். ஜெனரல் ஸ்டெர்ன்​வுட் குடும்​பத்​தின் மானத்​தைக் காக்க, ஷான் ரீகனை எடி மார்ஸ் கொன்​ற​தாக போலீசுக்​குத் தகவல் கொடுக்​கிறார் மார்​லோ. விவியனும் மார்​லோ​வும் இணை​கிறார்​கள்.

இயக்​குநர் ஹோவர்ட் ஹாக்​ஸ், ரேமண்ட் சாண்ட்​லரின் நாவலை சிக்​கலான வலைப் பின்​னலாகத் திரை​யில் நெய்​திருக்​கிறார்.

ஒரு​முறை பார்த்து கதை முழு​வதும் புரிந்​தவர்​களுக்கு நோபல் பரிசே கொடுக்​கலாம் என்று சொல்​லும் அளவுக்கு இதன் திரைக்​கதையை எழு​தி​ய​வர்​கள், நோபல் பரிசு பெற்ற வில்​லி​யம் ஃபாக்​னர், லீ பிராக்​கெட் மற்​றும் ஜூல்ஸ் ஃபர்த்​மேன்!

ஒளிப்​ப​திவு (சிட்னி ஹிக்​காக்​ஸ்): ‘ஃபிலிம் நுவார்’ (Film Noir) பாணி​யின் உச்​சம். இருண்ட நிழல்​கள், மழை​யில் நனைந்த சாலைகள், மங்​கலான ஒளி என மர்​ம​மான உலகத்தை கண்​ணெ​திரே நிறுத்​தி​யிருக்​கிறார்.

படத்​தொகுப்பு (கிறிஸ்​டியன் நைபி): ஒவ்​வொரு காட்​சி​யும் அடுத்த காட்​சிக்​கான ஆர்​வத்​தைத் தூண்​டு​வதோடு, கதை​யின் சிக்​கலை​யும் பதற்​றத்​தை​யும் சமநிலை​யுடன் தாங்​கு​கிறது.

இசை (மேக்ஸ் ஸ்டெய்​னர்): படத்​தின் ஒவ்​வொரு திருப்​பத்​தி​லும் அந்த இருண்ட சூழலை தக்​கவைப்​ப​தில் பின்​னணி இசை பெரும் பங்கு வகிக்​கிறது.

ஹம்ப்ரி போகார்ட் (பிலிப் மார்​லோ): ஒரு துப்​பறி​வாளர் எப்​படி இருக்க வேண்​டும் என்​ப​தற்கு இவரே இலக்​கணம்.

ஒவ்​வொரு முறை​யும் அவர் ஒரு கதவைத் திறந்து உள்ளே நுழை​யும்​போது, ஒரு புதிய மர்ம உலகுக்​குள் செல்வது​போல் காட்​சிப் படுத்​தப்​பட்​டிருக்​கிறது. இவரது நிதான​மான, ஆனால் கூர்​மை​யான நடிப்பு அபாரம்.

லாரன் பேக்​கால்: விவிய​னாக இவர் காட்​டும் அந்​தத் திமிர், ரகசி​யத்தை மறைக்​கும் பதற்​றம், மார்​லோ​விடம் காதல் வயப்​படு​வது எனத் தன் கண்​களாலேயே கதையை நகர்த்​தி​யிருக்​கிறார். நிஜத் தம்​ப​தி​ய​ரான போகார்ட்​-பேக்​கால் ஜோடி​யின் ‘வே​தி​யியல்’ உலகப்​பு​கழ் பெற்​றது.

மார்த்தா விக்​கர்ஸ் : ஒரு விளை​யாட்​டுத்​தன​மான, அதே​நேரம் ஆபத்​தான பெண் ணாக கார்​மென் கதா​பாத்​திரத்​தில் மிரட்​டி​யிருக்​கிறார். ஜான் ரிட்​ஜ்லி (எடி மார்​ஸ்):

நயவஞ்​சக​மான வில்​லத்​தனம். கத்​திக் கூச்​சலிடாமல், அமை​தி​யாகவே மிரட்​டும் இவரது நடிப்பு அந்த இருண்ட உலகத்​தின் பிர​திபலிப்​பு.

வேக​மான வசனங்​கள், புத்​தி​சாலித்​தன​மான மோதல்​கள் மற்​றும் ஆழமான பாத்​திரப் படைப்​பு​கள் இப்​படத்தை இன்​றும் சிறந்த ‘ஸ்​டடி மெட்​டீரி’ய​லாக மாற்​றி​யுள்​ளது.

மனித மனங்​களின்​ இருண்​ட பக்​கங்​களை ஆரா​யும்​ இந்​த மர்​மத்​ திரைப்​படத்​துக்​காக ஒரு மதி​ய நேரத்​தைத்​ தா​ராள​மாக ஒதுக்​கலாம்​.

(செவ்​வாய்​தோறும்​ படம்பார்ப்போம்)

- ramkumaraundipatty@gmail.com

‘தி பிக் ஸ்லீப்’ - 1946: நோபல் பரிசு பெற்றவர் எழுதிய திரைக்கதை! | ஹாலிவுட் மேட்னி 25
‘தி பெட்ரிஃபைட் ஃபாரஸ்ட்’ - 1936: காதல், தத்துவத்துக்கு மாறிய குற்றம்! | ஹாலிவுட் மேட்னி 24

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in