தி ஆஸ்ஃபால்ட் ஜங்​கிள் (1950): வங்கி கொள்ளை படங்களின் முன்னோடி | ஹாலிவுட் மேட்னி 56

தி ஆஸ்ஃபால்ட் ஜங்​கிள் (1950): வங்கி கொள்ளை படங்களின் முன்னோடி | ஹாலிவுட் மேட்னி 56
Updated on: 
3 min read

திறமையான கூட்​டாளி​களு​டன் திட்​ட​மிட்டு நடத்​தப்​படும் நகைக்​கடைக் கொள்ளை, எதிர்​பாராத விபத்​தால் தோல்​விக்​கும் துரோகத்​துக்​கும் வழிவகுத்து, அவர்​களின் வாழ்க்​கையை சிதைப்​ப​து​ தான் ‘தி ஆஸ்ஃபால்ட் ஜங்​கிள் (THE ASPHALT JUNGLE-1950)’ திரைப்​படத்​தின் ஒரு​வரிக் கதை.

அமெரிக்​கா​வின் ஒரு பெரிய நகரத்​தின் சாலைகளில் ரோந்து கார்​கள், முந்​தைய தினம் நடந்த குற்​றங்​களை ரேடியோவில் அறி​வித்​த​படி அலைபாய்​கின்​றன. அடை​யாள அணிவகுப்​பில் சந்​தேக நபர்​களோடு குற்​றத்​தில் தொடர்​புடைய டிக்ஸ் ஹேண்ட்​லியும் இடம்​பெற, அவனை யாரும் அடை​யாளம் காட்​ட​வில்லை. காவல்​துறை ஆணை​யர் ஹார்டி, ஊழல் பேர்​வழி லெப்​டினன்ட் டிட்​ரிச்​சைக் கண்​டித்து டிக்​ஸைத் தேடச் சொல்​கிறார்.

அந்த நேரத்​தில் குற்​றவுல​கில் ‘டாக்’ என்று அழைக்​கப்​படும் எர்​வின் ரீடென்​ஷ்னைடர் சிறை​யி​லிருந்து விடுதலை​யாகி வரு​கிறான். வந்​ததும், நகைக்​கடைக் கொள்​ளைக்​கான திட்​டத்​தைத் தீட்​டு​கிறான். கொள்​ளைத் திட்​டத்​துக்கு 50,000 டாலர் முதலீடு தேவைப்​படுவ​தால் சூதாட்​டத் தரகர் காபியைச் சந்​திக்​கிறான். அவர் வழக்​கறிஞர் அலோன்ஸோ எம்​மெரிச்​சிடம் டாக்கை அனுப்​பு​கிறான். காதலியால் பணத்தை இழந்து கடனில் தவிக்​கும் எம்​மெரிச், பண உதவி செய்​ய​வும் நகைகளை விற்​றுத் தரவும் சம்​மதிக்​கிறார். ஆனால், கொள்​ளைக்​குப் பின் டாக்கை ஏமாற்றி நகைகளை அபகரித்​துக்​கொள்ள நண்​பன் பாப், பிரானத்​துடன் திட்​டம் தீட்​டு​கிறார்.

டாக், கொள்​ளைக்​கான கூட்​டாளி​களைத் தேர்வு செய்​கிறான். தப்​பிச் செல்ல உதவும் வாகன ஓட்​டுநராக கஸ் மினிஸ்ஸியும், பாது​காப்​புப் பெட்​டகங்​களைத் திறப்​ப​தில் நிபுணனாக லூயிஸும், துணிச்​சலான அடி​யாளாக டிக்ஸ் ஹேண்ட்​லியும் அவனுடன் இணைகிறார்​கள்.

கொள்​ளை​யடிக்​கும் இர​வில் கஸ் வாக​னத்​துடன் காத்​திருக்க, லூயிஸ் பாதாளச் சாக்​கடைக் குழாய் வழியே நுழைந்து நகைக்​கடைச் சுவரை உடைக்​கிறான். பின்​பக்​கக் கதவைத் திறந்து டாக், டிக்ஸ் இரு​வரை​யும் உள்ளே அனுமதிக்​கிறான். லூயிஸ் வெடிவைத்து பாது​காப்​புப் பெட்​டகத்​தைத் திறக்​கும்​போது ஏற்​படும் அதிர்​வால் அலாரம் ஒலிக்​கிறது; நகைகளைப் பையில் அள்​ளிப் போடு​கிறான், டாக். அங்கு வரும் காவலா​ளிக்​கும் டிக்​ஸுக்​கும் இடையே நடக்​கும் மோதலில் துப்​பாக்கி வெடித்​ததில் லூயி​ஸின் வயிற்​றில் குண்டு பாய்​கிறது.

காயமடைந்த லூயிஸை, கஸ் அவனது வீட்​டுக்​குக் கொண்டு செல்ல, மருத்​து​வர் வரத் தாமத​மானதால் மனைவி​யின் கண்​முன்​னேயே லூயிஸ் உயி​ரிழக்​கிறான். இதற்​கிடையே, கொள்​ளை​யடித்த நகைகளு​டன் எம்​மெரிச்​சைச் சந்​திக்​கச் செல்​லும் டாக் மற்​றும் டிக்ஸை, பிரானம் துப்​பாக்கி முனை​யில் மிரட்​டு​கிறான். டிக்​ஸும் துப்​பாக்​கியைக் காட்ட, இரு​வருக்​கும் இடையே நடக்​கும் சண்​டை​யில் பிரானம் கொல்​லப்​படுகிறான். டிக்ஸ் காயமடைகிறான்.

எம்​மெரிச், பிரானத்​தின் உடலை ஆற்​றில் வீசி​விடு​கிறார். அவர் உடலை மீட்​கும்​போது கிடைத்த கடிதத்​தின் அடிப்​படை​யில் போலீ​ஸார் எம்​மெரிச்​சைத் தேடி வரு​கிறார்​கள். சம்​பவ தினத்​தன்று காதலி ஏஞ்​சலா​வுடன் இருந்​த​தாகப் பொய் சொல்​லுமாறு அவளிடம் எம்​மெரிச் கெஞ்​சுகிறார். ஆனால், போலீ​ஸாரின் மிரட்​டலில் ஏஞ்​சலா உண்​மையைக் கூறி​விடு​கிறாள். தனது போலிமுகம் வெளிப்​பட்ட அதிர்ச்​சி​யில் எம்​மெரிச் தற்​கொலை செய்து​கொள்​கிறார்.

பொது​மக்​கள் மத்​தி​யில் டாக்​கின் புகைப்​படம் பரவு​கிறது. காவல்​துறை​யிட​மிருந்து தப்​பிக்க நகரத்தை விட்டு வெளியேறும் டாக், வழி​யில் ஓர் உணவகத்​தில் நடனமாடும் இளம்​பெண்ணை ரசிப்​ப​தற்​காகப் பயணத்​தைத் தாமதப்​படுத்து​கிறான். தேடிவரும் காவல்​துறை​யினர் அவனைக் கைது செய்​கிறார்​கள்.

கொள்​ளைக் குழு​வில் மூவர் இறந்​ததையும், மூவர் சிறை​யில் இருப்​ப​தையும், ஒரு​வன் தப்​பியோடியதையும், டிட்​ரிச் கைது செய்​யப்​பட்​டதையும் பத்​தி​ரி​கை​யாளர்​களிடம் காவல் ஆணை​யர் ஹார்டி அறி​விக்​கிறார்.

படுகாயமடைந்த டிக்ஸ் தன்னை நேசிக்​கும் டாலுடன் காரில் தப்​பித்து, தனது நீண்​ட காலக் கனவான கென்​டக்கி குடும்​பப் பண்​ணை​யைச் சென்​றடைகிறான். அங்கு குதிரைகள் மேயும் இடத்​திலேயே சரிந்து விழுந்து உயி​ரிழக்​கிறான்.

தேடப்​படும் குற்​றவாளியாக அறி​முக​மாகும் டிக்​ஸின் கதை, அவனது கனவுப் பண்​ணை​யின் புல்​வெளி​யிலேயே முடிவதோடு படம் நிறைவடைகிறது.

டபிள்யூ.ஆர். பர்​னெட்​டின் நாவலை அடிப்​படை​யாகக் கொண்டு, பென் மேடோவுடன் இணைந்து குற்​றவாளி​களின் தனிப்​பட்ட வாழ்க்​கையையும், கொள்​ளைத் திட்​டத்​தில் அவர்​கள் வகுக்​கும் வியூகங்​களை​யும் மையப்​படுத்தி, ஒரு புளு​பி​ரின்ட் போல் திரைக்​கதை அமைத்து இயக்​கி​யிருக்​கிறார் ஜான் ஹூஸ்​டன். எம்.ஜி.எம் தயாரித்த இந்​தப் படம், பின்​னால் வந்த பல கொள்​ளைப் படங்​களுக்கு முன்​னோடி​யாக அமைந்​தது.

ஒளிப்​ப​திவு (ஹெரால்ட் ரோஸன்): மொத்​தப் படத்​தையும் நேரில் பார்ப்​பது போன்ற ஆவணப்​படத் தன்​மையுடன் காட்​சிப்​படுத்​தி​யிருக்​கிறார். இறுதி​யில் டிக்​ஸின் குடும்​பப் பண்​ணைக் காட்​சி​யில் நகரத்​தின் இருண்ட உல​கத்​துக்​கும் கிராமப்​புறத்​தின் திறந்த வெளிக்​கும் இடையே உள்ள வேறு​பாட்டை விஷுவலாக உணர்த்து​கிறார்.

படத்​தொகுப்பு (ஜார்ஜ் போம்​லெர்): ஒரே நேரத்​தில் பல இடங்​களில் பல கதாபாத்​திரங்​களுக்​கிடையே நடை​பெறும் செயல்​பாடுகளைக் குழப்​பமின்​றிக் கொண்டு சேர்த்​ததில் இவரின் பணி கச்​சிதம்.

இசை (மிக்​லோஸ் ரோஸா): ஒவ்​வொரு பதற்​றமான காட்​சி​யிலும் இசையால் பார்​வை​யாளர்​களைப் பதற்​றமடையச் செய்​யாமல், தேவை​யான இடங்​களில் உணர்​வு​ப்​பூர்​வ​மான பின்​னணியை வழங்​கி​யிருக்​கிறார்.

டாக் (சாம் ஜாஃபி): கொள்​ளை​யைத் திட்​ட​மிடுவதிலும் செயல்​படுத்​து​வதிலும் தனது திறமையை நூறு சதவீதம் நம்​பும் மூளைக்​காரன். எத்​தகைய பதற்​றமான சம்​பவங்​கள் நிகழ்ந்​தா​லும், கொஞ்​சம்​கூட டென்​ஷன் ஆகாமல் நிதானமாகச் செயல்​படு​பவனைச் சிறு சபலமே வீழ்த்தி விடு​கிறது.

எம்​மெரிச் (லூயிஸ் கால்​ஹெர்ன்): திருடர்​களிட​மிருந்தே திருட நினைக்​கும் தந்​திர​மும், இளம்பெண் மீதான சபலமும் கொண்ட வழக்​கறிஞர். இறுதி​யில் தோல்​வியை ஏற்க முடி​யாமல் தற்​கொலை செய்து​கொள்​ளும் இவரின் நடிப்பு தனித்​து​வ​மானது.

டிக்ஸ் (ஸ்​டெர்​லிங் ஹெய்​டன்): அடி​யாளாக வந்​தா​லும் குதிரைப் பண்​ணைக் கனவுடன் கொள்​ளை​யில் ஈடு​பட்டு மரிக்​கும் பரிதாபமான கதாபாத்​திரம்.

ஏஞ்​சலா (மர்​லின் மன்றோ): வய​தான வழக்​கறிஞரைச் சபலப்​படுத்​தும் இளம் பெண்​ணாகக் கொடுக்​கப்​பட்ட சிறிய கதாபாத்​திரத்​திலும் முத்​திரை பதித்து, பின்​னாளில் பலரின் தூக்​கம் கெடுத்த கனவுக் கன்னி.

ஹார்டி (ஜான் மெக்​இன்​டயர்): காவல்​துறை​யின் செயல்​பாடுகளைக் கம்​பீர​மாகக் கையாளும் காவல் ஆணை​யர்.

கஸ் (ஜேம்ஸ் விட்​மோர்) & லூயிஸ் (அந்​தோணி கருஸோ): கூன் விழுந்த முதுகுடன், நண்​பர்​கள் மீது ஆழமான விசுவாசம் கொண்ட கஸ்; பேராசையின்றி தன் மனைவி, குழந்​தையின் நலனுக்​காக மட்​டுமே பெட்​டகங்​களை உடைக்​கும் குடும்​பஸ்த​னாக வரும் லூயிஸ் என இரு​வரும் இயல்​பாக நடித்​திருக்​கிறார்​கள்.

காவல் ஆணை​யர் ஹார்டி பத்​தி​ரி​கை​யாளர் சந்​திப்​பில், ‘மக்​கள் ஏமாற்​றப்​படு​கிறார்​கள்; கொள்​ளை​யடிக்​கப்​படு​கிறார்​கள்; கொலை செய்​யப்​படு​கிறார்​கள்; பாலியல் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​படு​கிறார்​கள். வருடம் முழு​வதும், தினமும் 24 மணி நேர​மும் இவை தொடர்​கின்​றன. நவீன உல​கின் ஒவ்​வொரு நகரத்​திலும் இது​தான் நிலை’ என்று கூறுகிறார். எழுபத்​தாறு ஆண்​டுகளுக்கு முன்பு பேசப்​பட்ட இவ்​வசனம், இன்​றைய சமூகச் சூழலுக்​கும் பொருந்​து​வது மனதை வலிக்​கச் செய்​கிறது.

ஜான் ஹூஸ்​டன், கொள்​ளைத் திட்​டத்​தைத் துல்​லிய​மாகக் காட்​சிப்​படுத்​தி​விட்டு, எதிர்​பாராத சிறு விபத்​தால் ஒவ்​வொரு​வருக்​கும் நேரும் முடிவு​களைச் சித்​தரித்த விதம் கொள்​ளை​யர்​கள் மீதும் இரக்​கம் கொள்ள வைக்​கிறது. இயக்​கம், திரைக்​கதை, ஒளிப்​ப​திவு, சாம் ஜாஃபியின் துணை நடிப்பு என நான்கு ஆஸ்​கர் பிரிவு​களில் இப்​படம் பரிந்​துரைக்​கப்​பட்​டது.

பேராசையும் துரோகமும் கொண்ட மனிதர்​கள் சக மனிதர்​களை வேட்​டை​யாடித் திரியும் இந்​தத் தார்​ சாலைக் காட்​டுக்​குள், எந்த ஆபத்​து​மின்றி ஒரு மாலைப்​பொழுதில் உலா வரலாம்.

(செவ்​வாய்தோறும் படம் பார்ப்போம்)

தி ஆஸ்ஃபால்ட் ஜங்​கிள் (1950): வங்கி கொள்ளை படங்களின் முன்னோடி | ஹாலிவுட் மேட்னி 56
கைண்ட் ஹார்ட்ஸ் அண்ட் கோரோனெட்ஸ் (1949): பிரபு பட்டத்துக்காக கொலைகள்! | ஹாலிவுட் மேட்னி 55

X