போதை​யில் வாக​னம் ஓட்டியதாக பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கைது

போதை​யில் வாக​னம் ஓட்டியதாக பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கைது
Updated on
1 min read

பிரபல பாப் பாடகி​யும் நடிகை​யு​மான பிரிட்னி ஸ்பியர்ஸ், மது​போதை​யில் வாக​னம் ஓட்​டிய​தாகக் கைது செய்யப்பட்​டார்.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னி​யா​வில் உள்ள வெஞ்​சுரா கவுண்​டி​யில் அவர் மது​போதை​யில் புதன்​கிழமை இரவு வாக​னம் ஓட்​டிய​தாகக் கூறப்​படு​கிறது. அந்த சந்​தேகத்​தின் பேரில் அவர் கைது செய்​யப்​பட்​டார். பின்​னர் விசா​ரணைக்​குப் பிறகு விடுவிக்​கப்​பட்​டார்.

அவர் மீதான அதி​காரப்​பூர்வ குற்​றச்​சாட்​டு​கள் இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. அவர் மே 4-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பிரிட்னி​யின் மேலா​ளர் கேட் ஹட்​சன் வெளி​யிட்​டுள்ள அறிக்கை​யில், “இது துர​திர்​ஷ்ட​வச​மான மற்​றும் மன்​னிக்க முடி​யாத சம்​பவம். பிரிட்​னி, சட்​டத்​துக்கு முழு​மை​யாகக் கட்​டுப்​படு​வார்.

அவரது வாழ்க்​கை​யில் நீண்​ட​கால​மாகத் தேவைப்​படும் ஒரு மாற்​றத்​துக்கு இதுவே தொடக்​க​மாக அமை​யும் என்று நம்​பு​கிறோம். இந்த இக்​கட்​டான நேரத்​தில் அவருக்​குப் போதிய உதவி​யும் ஆதர​வும் தேவை” என்று தெரி​வித்​துள்​ளார்.

போதை​யில் வாக​னம் ஓட்டியதாக பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் கைது
தேர்தல் தேதி அறிவிக்கட்டும்... சுதந்திரமாக சூறாவளி பிரச்சாரத்துக்குத் தயாராகும் விஜய்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in