திரைப்படத்தின் மாஸ்டர் காப்பி திருட்டு - நெட்பிளிக்ஸ் மீது ரூ.900 கோடி இழப்பீடு கோரி வழக்கு

நிக்கோலஸ் கேஜ்

நிக்கோலஸ் கேஜ்

Updated on
1 min read

இரண்டாம் உலகப் போர் பின்னணியில் ‘ஃபார்டி டியூடு’ (Fortitude) என்ற படத்தை சைமன் அஃப்ரம் தயாரித்துள்ளார். 45 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

7 ஆண்டு உழைப்பில் தயாரான இப்படத்தில் நிக்கோலஸ் கேஜ் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மாஸ்டர் காப்பியை, நெட்பிளிக்ஸின் கோரிக்கையின் பேரில் கடந்த ஜூன் மாதம் அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் 9 நாட்களுக்குப் பிறகு, நெட்பிளிக்ஸில் இருந்து வந்த மெயிலில், கடந்த வாரம் எங்கள் அலுவலகத்தில் இருந்த பல ஹார்டு டிரைவ்களை யாரோ திருடிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. திருடப்பட்ட ஹார்டு டிரைவ்களில் ‘ஃபார்டிடியூடு’ திரைப்படத்தின் மாஸ்டர் காப்பியும் இருந்ததாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால், அந்தப்படம் எப்போது வேண்டுமானாலும் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகும் அபாயம் இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் சைமன் அஃப்ரம், நெட்பிளிக்ஸுக்கு எதிராக 105 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.900 கோடி) இழப்பீடு கோரி அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எப்போதுவேண்டுமானாலும் படம் இணையத்தில் கசியலாம் என்பதால் எந்த பெரிய நிறுவனமும் அந்தப் படத்தை வாங்க கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்வது சாத்தியமற்றது” என்று குறிப்பிட்டுள்ள தயாரிப்பாளர், இந்த சம்பவத்துக்கு நெட்பிளிக்ஸே பொறுப்பு என்றும் திரைப் படத்தின் மாஸ்டர் காப்பி இருந்த ஹார்டு டிரைவை போதிய பாதுகாப்புடன் வைத்திருக்கத் தவறிய

தாகவும் குற்றம்சாட்டி, 105 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நெட்பிளிக்ஸ், தொழில்துறையில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் இன்றி படத்தின் மாஸ்டர் காப்பி வழங்கப்பட்டதால், அதற்கான பொறுப்பு தங்களுக்கில்லை என்று தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p><em>நிக்கோலஸ் கேஜ்</em></p></div>
Chinna Chinna Aasai: என்று தணியும் லீலாக்களின் சுய தேடல்கள்?! | திரை தேவதைகள் 29

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in