

மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸே’ அடுத்த ஆண்டு டிச.18-ல் வெளியாக இருக்கிறது. மார்வல் ஹீரோக்கள் பெரும்பாலோனோர் நடித்துள்ள இப்படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது.
இதற்கிடையே இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக மார்வெலின் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு செப். 26-ம் தேதி இந்தப் படம் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது.
ஜோ ரூஸோ மற்றும் அந்தோணி ரூஸோ இயக்கத்தில் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் 22-வது படமான எண்ட்கேம், 2019-ல் வெளியாகி உலகளவில் அதிக வசூல் செய்த 2-வது திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.
இதில் ஜூனியர், கிறிஸ் இவான்ஸ், மார்க் ருஃபாலோ, கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஸ்கார்லெட் ஜோஹன்சன், ஜெர்மி ரென்னர், டான் சீடில் உள்பட பலர் நடித்துள்ளனர்.