ஹாலிவுட் இயக்​குநர் அமோஸ் போ கால​மா​னார்

ஹாலிவுட் இயக்​குநர் அமோஸ் போ கால​மா​னார்
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்​குநரும் சுயாதீன திரைப்பட முன்​னோடி​யு​மான அமோஸ் போ (76) கால​மா​னார். இதை அவருடைய மனைவி கிளாடியா சம்​மர்ஸ் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

ஹாலிவுட்​டில் வெளி​யான தி பிளாங்க் ஜெனரேஷன்​ (1976), த ஃபாரீனர் (1978), சப்வே ரைடர்ஸ் (1981), அல்​பாபெட் சிட்டி (1985), பிராக்ஸ் பார் சினேக்ஸ் (1998), வாக் இன் த பார்க் உள்பட பல படங்​களை இயக்​கிய​வர் இவர்.

தொழில்​நுட்​பத்தை விட கருத்தை முன்​னிலைப்​படுத்​து​வதும் விதி​களை கேள்விக் கேட்​பது​மான ‘பங்க் பிலிம் மேக்​கிங்​’கில் (punk filmmaking) இருந்து உரு​வான ‘நோ வேவ் சினி​மா’ இயக்​கத்​தின் முன்​னோடி இவர்.

புற்​று​நோ​யால் பாதிக்​கப்​பட்​டிருந்த அமோஸ் போ, கடந்த சில வருடங்​களாக அதற்​காக சிகிச்​சைப் பெற்று வந்​தார். இந்​நிலை​யில் சிகிச்சை பலனின்றி டிச.25-ம் தேதி கால​மா​னார். இதையடுத்து ஹாலிவுட் திரைபிரபலங்​கள் அவர் மறைவுக்கு இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

ஹாலிவுட் இயக்​குநர் அமோஸ் போ கால​மா​னார்
ஷில்பா ஷெட்​டி​யின் மார்​பிங் புகைப்​படங்​கள்: உடனடி​யாக நீக்க உயர் நீதி​மன்​றம் உத்​தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in