தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி
Updated on
1 min read

அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’.

இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ். பின்​னர் ‘எவ்​ரிபடி ஹேட்ஸ் கிறிஸ்’ என்ற நகைச்​சு​வைத் தொடரிலும் தோன்​றிய அவர், 2007-ம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்​கோ​வின் ‘குட் டைம் மேக்​ஸ்’ என்ற ஹாலிவுட் படம் மூலம் சினி​மா​விலும் அறி​முக​மா​னார். அதில் யங் ஆடமாக நடித்திருந்​தார். கடைசி​யாக ‘லா நோயர்’ என்ற வீடியோ கேமில் பணி​யாற்​றி​னார்.

சின்​னத்​திரை​யில் புகழ்​பெற்ற நடிக​ரான இவர், ஒரு​கட்​டத்​தில் நடிப்​ப​திலிருந்து வில​கி​னார். பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்​லை. இந்​நிலை​யில் அவர் கலி​போர்​னி​யா​வில் வசிக்க வீடின்றி தெரு​வில் யாசகம் பெற்று வாழும் வீடியோ இணையத்தில் வேக​மாகப் பரவி வரு​கிறது. 36 வயதான டெய்​லர் சேஸ் அந்த வீடியோ​வில், கிழிந்த ஆடைகளை அணிந்​த​படி பேச முடி​யாமல் தவிக்​கிறார்.

தனது தளர்​வான கால்​ சட்​டையை, அவிழ்ந்து விடா​மல் இருக்​கப் பிடித்​துக் கொண்டு நிற்​பது பரி​தாப​மாக உள்​ளது. ஒரு காலத்​தில் பல கேம​ராக்​கள் மற்​றும் முன்​னணி நட்​சத்​திரங்​களு​டன் நின்ற அவர், இப்​போது கலி​போர்​னி​யா​வின் தெருக்களில் யாசகம் பெற்று வரு​வது பலரை அதிர்ச்​சிக்​குள்​ளாக்கி உள்​ளது. புகழின் உச்​சத்​தில் இருந்த ஒரு​வர் எப்​படி இப்​படி​யா​னார் என்று சமூக வலை​தளங்​களில் ரசிகர்​கள் கேட்​டு வரு​கின்​றனர்​.

தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர் - ரசிகர்கள் அதிர்ச்சி
குறையக் கூடாது அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in