ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிடம் ரூ.7 கோடி மோசடி

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிடம் ரூ.7 கோடி மோசடி
Updated on
1 min read

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பின் கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி சுமார் ரூ.7 கோடி வரை மோசடி செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2024- 2025ம் ஆண்டு காலகட்டத்தில் ஜானி டெப்பின் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி, 308 முறை சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. 27 வயதான அந்த சைபர் குற்றவாளி, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் ஹோட்டல் போன்றவற்றுக்காகப் பணத்தைச் செலவிட்டுள்ளார்.

வங்கி அதிகாரிகளுக்குச் சந்தேகம் வராமல் இருக்க, சிறிய சிறிய தொகைகளாக எடுத்து இந்த மோசடியைச் செய்துள்ளார். வங்கி அதிகாரிகளின் புகாரை அடுத்து 27 வயது இளைஞரை ஹங்கேரிய போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிடம் ரூ.7 கோடி மோசடி
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in