2028-ம் ஆண்டில் ‘டேஸ் ஆஃப் தண்டர் 2-ம் பாகம்’ - நடிகர் டாம் குரூஸ் தகவல்

2028-ம் ஆண்டில் ‘டேஸ் ஆஃப் தண்டர் 2-ம் பாகம்’ - நடிகர் டாம் குரூஸ் தகவல்
Updated on
1 min read

டோனி ஸ்காட் இயக்​கத்​தில் டாம் குரூஸ் நடித்து 1990-ம் ஆண்டு வெளி​யானத் திரைப்​படம், ‘டேஸ் ஆஃப் தண்​டர்’. இதில் ராபர்ட் டுவால், ராண்டி குவைட், மைக்​கேல் ரூக்​கர், நிக்​கோல் கிட்​மேன் மற்​றும் கேரி எல்​வெஸ் ஆகியோர் நடித்​துள்​ளனர். கார் ரேஸ் பின்​னணி​யில் உரு​வான இதில் நிஜ வாழ்க்கை கார்​ ரேஸ் வீரர்​களும் நடித்​திருந்​தனர்.

கார் ரேஸ் உள்​ளிட்ட ஆக் ஷன் காட்​சிகள் பாராட்​டப்​பட்​டாலும் இப்​படம் வசூல் ரீதி​யாக பெரிய வெற்​றியைப் பெற​வில்​லை. இப்​படத்​தின் அடுத்த பாகம் உரு​வாக இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி இருந்​தது.

இந்​நிலை​யில் அதை டாம் குரூஸ் அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​துள்​ளார். 36 ஆண்​டு​களுக்​குப் பிறகு உரு​வாகும் இதன் இரண்​டாம் பாகம், 2028-ம் ஆண்டு ஜூன் 2- ம் தேதி வெளி​யாகும் என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

இதில் ஹாலிவுட் நடிகை ஆனி ஹாத்வே முதன்மை வேடத்​தில் நடிக்​கிறார். ஜொனாதன் லெவின் இயக்​கும் இப்​படத்​துக்கு வில் ஸ்டேபிள்​ஸ் திரைக்​கதை எழு​தி​யுள்​ளார். ஜெர்​ரி புரூக்​ஹைமர்​ மற்​றும்​ டாம்​மி ஹார்​பருடன்​ இணைந்​து டாம்​ குரூஸ்​ தயாரிக்​கிறார்​.

2028-ம் ஆண்டில் ‘டேஸ் ஆஃப் தண்டர் 2-ம் பாகம்’ - நடிகர் டாம் குரூஸ் தகவல்
தமிழில் வெளியாகிறது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in