பிரபல ஹாலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சலஸ்: ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும் தற்காப்புக் கலைஞருமான சக் நோரிஸ் காலமானார். அவருக்கு வயது 86. 

1940-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓக்லஹாமாவில் பிறந்த சக் நோரிஸ், அமெரிக்க விமானப் படையில் பணியாற்றியபோது கொரியாவில் தற்காப்புக் கலைகளைக் கற்கத் தொடங்கினார். கராத்தே போட்டிகளில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அவர், 'சுன் குக் டோ' என்ற புதிய தற்காப்புக் கலை முறையை உருவாக்கினார்.

1972-ல் புரூஸ் லீ உடன் இணைந்து நடித்த ‘ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன்’ திரைப்படத்தில், ரோமின் கொலோசியத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த சண்டைக் காட்சி இன்றுவரை திரையுலகின் மிகச்சிறந்த சண்டைக் காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சக் நோரிஸ் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘மிஸ்ஸிங் இன் ஆக்ஷன்’, ‘தி டெல்டா ஃபோர்ஸ்’ மற்றும் ஒன்பது சீசன்கள் வெற்றிகரமாக ஓடிய ‘வாக்கர், டெக்சாஸ் ரேஞ்சர்’ என்ற தொடர் மிக பிரபலமாக்கியது. 

அவரது கம்பீரமான தோற்றம் மற்றும் ஆகிருதியான உடற்கட்டு காரணமாக இணையதளங்களில் ‘சக் நோரிஸ் ஃபேக்ட்ஸ்’ என்ற பெயரில் உருவான மீம்கள்இக்கால இளைஞர்களிடமும் அவரைப் பிரபலப்படுத்தியது. ‘சக் நோரிஸ்-க்கு வயதாவதில்லை, அடுத்த நிலைக்கு முன்னேறுகிறார்’ என்பது போன்ற நகைச்சுவையான வாசகங்கள் உலகப் புகழ் பெற்றவை.

சமீபத்தில் தனது 86-வது பிறந்தநாளைக் கொண்டாடிய சக் நோரிஸ், இன்ஸ்டாகிராமில் தான் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, "எனக்கு வயதாகவில்லை, லெவல் அப் செய்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். அதுவே அவரது கடைசிப் பதிவாக அமைந்தது. அவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு சினிமா ரசிகர்கள் மற்றும் தற்காப்புக் கலை ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் சக் நோரிஸ் காலமானார்
முதல் நாளில் ரூ.240 கோடி வசூல் - ‘துரந்தர் 2’ சாதனை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in