‘பார்பி 2’ உருவாகுமா? - ஊதிய பேச்சுவார்த்தையில் சிக்கல்

‘பார்பி 2’ உருவாகுமா? - ஊதிய பேச்சுவார்த்தையில் சிக்கல்
Updated on
1 min read

கிரேட்டா கெர்விக் இயக்​கத்​தில் மார்​கோட் ராபி, ரியான் கோஸ்​லிங், இசா ரே, கேட் மெக்​கினன் உள்பட பலர் நடித்து 2023-ம் ஆண்டு வெளி​யான திரைப்​படம் ‘பார்​பி’.

உலக அளவில் பிரபல​மான பார்பி பொம்​மை​களை அடிப்​படை​யாகக் கொண்டு எடுக்​கப்​பட்ட இத்​திரைப்​படம், பார்​பிகளின் உலகுக்​கும் உண்​மை​யான உலகுக்​கும் இடையே உள்ள வேறு​பாட்​டைப் பிர​திபலித்​தது. உலகம் முழு​வதும் வரவேற்​பைப் பெற்ற இப்​படம், வார்​னர் பிரதர்ஸ் வரலாற்​றில் அதிக வசூல் செய்த திரைப்​பட​மாகத் திகழ்​கிறது.

இந்த வெற்​றியைத் தொடர்ந்​து, இப்​படத்​தின் அடுத்த பாகம் உரு​வாக இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டது. ரசிகர்​கள் மத்​தி​யில் இந்​தப் படத்​துக்கு எதிர்​பார்ப்​பும் இருந்து வரு​கிறது. ஆனால், ஊதிய ஒப்​பந்​தச் சிக்​கல்​கள் காரண​மாக அந்​தத் திட்​டம் நிறுத்தி வைக்​கப் பட்​டுள்​ள​தாகத் தகவல்​கள் வெளி​யாகி யுள்​ளன.

இயக்​குநர் கிரெட்டா கெர்விக், ‘பார்​பி’​யாக நடித்த மார்​கோட் ராபி உள்​ளிட்ட முக்​கியக் கலைஞர்​களு​டன் நடை​பெற்று வந்த ஊதிய பேச்​சு​வார்த்தை சுமூக​மாக முடிய​வில்​லை.

படக்​குழு​வினர் மிகப்​பெரிய ஊதி​யத் தொகை​யைக் கேட்​ப​தாக​வும் வார்​னர் பிரதர்ஸ் நிறு​வனத்​தின் தலைமை நிர்​வாக அதி​காரி​யான டேவிட் ஜாஸ்​லவ் அதை ஏற்​றுக்​கொள்ள மறுப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது. கடந்த 3 ஆண்​டு​களில் 6 முறைக்கு மேல் ஊதிய ஒப்​பந்த வாய்ப்​பு​களை வார்​னர் பிரதர்ஸ் நிறு​வனம் வழங்​கிய​தாக​வும், அவற்​றைப் படக்​குழு நிராகரித்​த​தால் ‘பார்பி 2’ உரு​வாக வாய்ப்​பில்லை என்று தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

‘பார்பி 2’ உருவாகுமா? - ஊதிய பேச்சுவார்த்தையில் சிக்கல்
சுசீந்திரன் இயக்கத்தில் சீமான், சாந்தனு இணைந்து நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’
‘பார்பி 2’ உருவாகுமா? - ஊதிய பேச்சுவார்த்தையில் சிக்கல்
Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in