ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் நடிக்க வில் ஸ்மித் ஆசை!

ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் நடிக்க வில் ஸ்மித் ஆசை!
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலுக்காக ‘போல் டூ போல்’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 100 நாட்களில் ஆபத்தான மற்றும் தனித்துவமான, நம்ப முடியாத சவால்களை அவர் எதிர்கொள்வது போன்ற இந்நிகழ்ச்சி, நேற்று முதல் (ஜன.13) ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக துபாய் வந்த வில் ஸ்மித், பாலிவுட் ஹீரோக்களுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப்பச்சன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். பல இந்தி நடிகர்கள் ஹாலிவுட்டில் தங்கள் முத்திரையைப் பதித்திருந்தாலும், அங்குள்ள நடிகர்கள் பாலிவுட்டில் யாரும் பெரிதாகப் பங்களிக்க வில்லை.

நான் சல்மான் கானுடன் படங்கள் பற்றி சில விஷயங்களைப் பேசியிருக்கிறேன். ‘பிக் பி’ என்றழைக்கப்படும் அமிதாப்பச்சனுடன் நடிக்க முயற்சித்தேன். அவர் நீங்கள், ‘பிக் டபிள்யூ’ ஆக முடியும் என்று என்னிடம் கூறினார். இருந்தும் பல ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. நடிகர் ஷாருக்கான் என்னை அவருடைய பாலிவுட் படத்தில் நடிக்க வைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்பட பலர் ஹாலிவுட்டில் நடித்துள்ளனர். ஆனால் ஹாலிவுட்டில் இருந்து முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இங்கு நடிக்கவில்லை என்பதை வில் ஸ்மித் கூறியுள்ளார். அதோடு இந்திய சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற தனது ஆசையை இதற்கு முன்னும் அவர் தெரிவித்திருந்தார்.

ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட்டில் நடிக்க வில் ஸ்மித் ஆசை!
‘மாண்புமிகு’ இருக்கை மீது ‘கோல்டு’ காவித் தலைவருக்கு ஆசை | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in