Published : 20 May 2023 02:45 PM
Last Updated : 20 May 2023 02:45 PM

ஸ்பைடர் மேனுக்கு குரல் கொடுக்கும் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்

மும்பை: ‘ஸ்பைடர் மேன் இன்டூ தி ஸ்பைடர்வெர்ஸ்’ படத்தின் இந்தி மற்றும் பஞ்சாபி பதிப்புகளில் இந்திய ஸ்பைடர் மேனான பவித்ர் பிரபாகர் கதாபாத்திரத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் குரல் கொடுக்க இருக்கிறார்.

2018-ஆம் ஆண்டு சோனி - மார்வெல் கூட்டு தயாரிப்பில் வெளியான அனிமேஷன் படம் ‘ஸ்பைடர் மேன் இன்டூ தி ஸ்பைடர்வெர்ஸ்’. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் படங்களில் வரும் மல்டிவெர்ஸ் கதைக்களம் இப்படத்தில்தான் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. வாக்கிங் டாஸ் சான்டோஸ், ஜஸ்டின் கே.தாம்ப்சன், கெம்ப் பவர்ஸ் என்று மூன்று இயக்குநர்கள் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகிறது.

‘ஸ்பைடர் மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படம் இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இந்தி மற்றும் பஞ்சாபி பதிப்புகளுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் குரல் கொடுக்க உள்ளார்.

இப்படத்தில் ஸ்பைடர் மேனின் பல வெர்ஷன்கள் இடம்பெறுகின்றன. அதில் இந்திய ஸ்பைடர்மேனான பவித்ர் பிரபாகர் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. இந்த கதாபாத்திரத்துக்குத்தான் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் குரல் கொடுக்கவுள்ளார். ‘ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர்:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x