கனவுகள் நிறைவேறும்... பெண்களே: சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற மிஷெல் கூறிய அறிவுரை

மிஷெல் யோ
மிஷெல் யோ
Updated on
1 min read

கனவுகள் நிறைவேறும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்ற மிஷெல் யோ தெரிவித்திருக்கிறார்.

95 - வது ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இதில், டேனியல் கிவான் மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் இயக்கத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான படம் “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்”. இந்தப் படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்று உலக அரங்கில் சாதனை படைத்துள்ளது. இதில் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை இப்படத்தில் நடித்த மிஷெல் யோ (Michelle Yeoh) வென்றுள்ளார்.

ஆஸ்கர் மேடையில் கையில் விருதுடன் மிஷெல் பேசியதாவது, “உங்கள் கனவுகள் நிறைவேறும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். பெண்களே.. உங்களை நோக்கி, நீங்கள் உங்கள் வாழ்வின் உச்சமாக இருக்க வேண்டிய தருணங்களை கடந்துவீட்டீர்கள் என யாரும் கூற அனுமதிக்காதீர்.

இந்த விருது எனக்கானது மட்டுமல்ல. என்னை திரையில் பார்த்துக் கொண்டிருக்கும் சிறுமிக்கானதும் கூட. ஆஸ்கரில் இந்த இடம் எனக்கு வழங்கப்பட்டதற்கு நன்றி. ஏனென்றால் இது நிறைய நபர்களுக்கு தேவைப்படுகிறது. நாங்கள் பார்க்கப்பட வேண்டும், நாங்கள் கேட்கப்பட வேண்டும், அது சாத்தியம் என்பதை இன்றிரவு நீங்கள் எங்களுக்குக் காட்டியுள்ளீர்கள். இதற்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்” என்று பேசினார்.

ஆஸ்கர் விருதின் 95 ஆண்டுகால வரலாற்றில் ஆசிய பெண் ஒருவர் ஆஸ்கர் விருது பெறுவது இதுவே முதல் முறை.

யார் இந்த மிஷெல் யோ: மலேசியாவை சேர்ந்த மிஷெல் யோ, கடந்த 40 வருடங்களாக திரைத்துறையில் இருந்து வருகிறார். தனது சண்டை காட்சிகள் மூலம் பிரபலமடைந்த மிஷெலுக்கு ஹாலிவுட் திரைப்பட கதவுகள் 1997 -ல் ஜேம்ஸ் பாண்ட் படம் மூலம் திறந்தது. அதனைத் தொடர்ந்து ஹாலிவுட்டின் ஆசிய முகமாக அறியப்படுகிறார் மிஷெல் யோ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in