மருத்துவமனையில் இருந்து அவெஞ்சர்ஸ் நடிகர் ‘செல்ஃபி’

மருத்துவமனையில் இருந்து அவெஞ்சர்ஸ் நடிகர் ‘செல்ஃபி’
Updated on
1 min read

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெரமி ரெனர். ‘அவெஞ்சர்ஸ்’ படம் மூலம் புகழ்பெற்ற இவர், அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள மவுண்ட் ரோஸ் - ஸ்கி தஹோ பகுதியில் வசித்து வருகிறார். புத்தாண்டு அன்று அங்கு பனிப்புயல் ஏற்பட்டது. இதில் ஜெரமியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் சென்ற கார் சிக்கிக்கொண்டது. அதை மீட்பதற்காக, சாலையில் இருந்து பனியை அகற்றும் வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஜெரமி படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அபாய கட்டத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ள ஜெரமி ரெனர், ‘உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார். அவர் முகத்தில் காயம் இருக்கிறது. மூக்கின் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டுவருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in