ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்காததில் வருத்தமில்லை - டேனியல் கிரெய்க்

ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்காததில் வருத்தமில்லை - டேனியல் கிரெய்க்

Published on

பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க். இவர் தொடர்ந்து 5 முறை, ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்தார். கடைசியாக, ‘நோ டைம் டு டை’ என்ற பாண்ட் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 2021ம் ஆண்டு வெளியானது. இனி, ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துவிட்டார். இந்நிலையில், அந்த கேரக்டரில் நடிக்காததில் வருத்தம் இல்லை என்று தெரிவித்துள்ளார் கிரெய்க்.

இதுபற்றி அவர் கூறும்போது, “பாண்ட் கேரக்டர் இறக்கவில்லை. நான்தான் அதில் இருந்து விலகிவிட்டேன். ‘நோ டைம் டு டை’ படத்தின் இறுதியில் பாண்ட் வருவதாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால், அவர் ஒரு கட்டத்தில் திரும்பி வருவார்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in