‘அக்வாமேன் 2’ படத்துக்கான தலைப்பு வெளியீடு

‘அக்வாமேன் 2’ படத்துக்கான தலைப்பு வெளியீடு
Updated on
1 min read

டிசி காமிக்ஸின் ‘அக்வாமேன் 2’ படத்துக்கான தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வான் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘அக்வாமேன்’. டிசி காமிக்ஸ் கதாபாத்திரமான அக்வாமேனை பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில் ஜாசன் மோமா, ஆம்பர் ஹேர்ட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கரோனா அச்சுறுத்தலால் பாதியில் நிறுத்தப்பட்ட இப்படம் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘அக்வாமேன்: தி லாஸ்ட் கிங்டம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதை இப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் வான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதற்கான போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் ‘அலை எழுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in