நடிகர் டாம் ஹாங்க்ஸுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

நடிகர் டாம் ஹாங்க்ஸுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
Updated on
1 min read

நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது மனைவி ரீடா வில்சன் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அங்குதான் அவருக்கும் அவர் மனைவிக்கும் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இது குறித்து டாம் ஹாங்க்ஸே பதிவிட்டுள்ளார்.

"ஹெல்லோ மக்களே, ரீடாவும் நானும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம். கொஞ்சம் சோர்வை உணர்ந்தோம். ஜலதோஷம், உடல் வலி இருந்தது. ரீடாவுக்கு குளிர் வந்து வந்து போனது. லேசான ஜுரமும். இன்றைய தேவை, செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று கரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொண்டோம். எங்களுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதாரம், பாதுகாப்புக்குத் தேவைப்படும் வரை பரிசோதனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, தனிமையில் இருப்போம். இனி அந்தந்த நாளுக்குத் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்தும் அணுகுமுறையை கடைப்பிடிக்கவுள்ளோம். இதைத் தாண்டி இதில் எதுவும் இல்லை. தொடர்ந்து நடக்கும் விஷயங்களை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்"/

இவ்வாறு டாம் ஹாங்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 122 நபர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in