ஸ்பைடர் மேன் முதல் தோற்றம் வெளியீடு

ஸ்பைடர் மேன் முதல் தோற்றம் வெளியீடு
Updated on
1 min read

சூப்பர் ஹீரோ கதையை கொண்ட ‘ஸ்பைடர் மேன்’ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 8 ஸ்பைடர் மேன் திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.

இதில் டாம் ஹாலண்ட் ஸ்பைடர் மேனாக நடித்து ‘ஸ்பைடர் மேன்: ஹோம் கமிங்' , ‘ஸ்பைடர் மேன்: ஃபார் ஃபிரம் ஹோம்’, ‘ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்’ ஆகிய 3 படங்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இப்போது அவர் நடிப்பில் நான்காவதாக உருவாகியுள்ள படத்துக்கு 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' என்று தலைப்புவைக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த சினிமா கான் விழாவில், இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டன் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை 31-ல்படம் ரிலீஸ் ஆகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in