ஆஸ்கர் 2024 | சிறந்த படத்துக்கான விருதை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’ 

ஆஸ்கர் 2024 | சிறந்த படத்துக்கான விருதை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’ 

Published on

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் வென்றுள்ளது.

கிறிஸ்டோஃபர் நோலனின் ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது. இந்த விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த உறுதுணை நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த அனிமேஷன் Feature, சிறந்த ஆவணப்பட Feature, சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை, சிறந்த புரொடக்‌ஷன் டிசைன், சிறந்த ஒலி, சிறந்த பிலிம் எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த லைவ் ஆக்‌ஷன், சிறந்த ஆவணப்பட ஷார்ட் உள்ளிட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில் சிறந்த திரைப்படம் பிரிவில் பத்து படங்கள் பரிந்துரைக்கப்பட்டன. கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’, ’அமெரிக்கன் ஃபிக்‌ஷன்’, ‘அனாடமி ஆஃப் எ ஃபால்’, ‘பார்பி’, ‘தி ஹோல்டோவர்ஸ்’, ‘கில்லர்ஸ் ஆஃப் தி பிளவர் மூன்’, ‘மேஸ்ட்ரோ’, ‘பாஸ்ட் லைவ்ஸ்’, ‘புவர் திங்ஸ்’, ‘தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட்’ ஆகிய படங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

இந்த பட்டியலில் தற்போது கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ சிறந்த திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in