

இந்தி நடிகரான மிலிந்த் சோமன், தமிழில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘டாக்டர்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர், ஓடிடி தளங்களில் அனுபவம் வாய்ந்த நடிகர்களுக்கு இப்போது அதிக வாய்ப்புகள் கிடைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “திரையுலகம் இப்போது மாறிவிட்டது. இன்றைய காலகட்டத்தில் நம்மிடம் இணையம் இருக்கிறது. ஓடிடி தளங்கள் ஏராளமாக உருவாகி உள்ளன. அதனால் அதிகமான பொழுதுபோக்கு அம்சங்கள் பார்வையாளர்களுக்கு கிடைக்கின்றன.
ஓடிடி-க்காக பிரத்யேகமாக திரைப்படங்களும் நிகழ்ச்சிகளும் உருவாக்கப்படுகின்றன. இதனால் பழைய தலைமுறை நடிகர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. அவர்களுக்கு சிறந்த அனுபவம் இருப்பதால், தங்கள் கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். எனவே, இது அனைவருக்கும் நல்ல நேரம். அதிகமான வாய்ப்புகள் கிடைக்கின்றன” என்றார்.