ஆமிர் கான் மகனுடன் த்ரில்​லர் படத்​தில் நடிக்கிறார் தமன்னா!

ஆமிர் கான் மகனுடன் த்ரில்​லர் படத்​தில் நடிக்கிறார் தமன்னா!
Updated on
1 min read

இந்​தி​யில் உரு​வான ஹாரர் த்ரில்​லர் படம், ‘ராகினி எம்எம்எஸ்’. காமெடி​யுடன் கூடிய இந்​தப் படத்​தின் முதல் இரண்டு பாகங்​கள் வெற்றி பெற்​றதை அடுத்​து, இதன் மூன்​றாம் பாகம் தற்போது உரு​வாகிறது. இதற்கு ‘ராகினி 3' என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.

இதில் தமன்னா நாயகி​யாக நடிக்​கிறார். இப்​படத்​தில் அமீர் கானின் மகன் ஜுனைத் கான் நாயக​னாக நடிக்கிறார். இப்​படத்தை சாஹிர் ராசா இயக்​கு​வார் என்று முதலில் கூறப்​பட்​டது.

இப்​போது ஷஷாங்கா கோஷ் இயக்​கு​வார் என்​றும் சாஹிர் ராசா மேற்​பார்வை செய்​வார் என்​றும் கூறப்​பட்​டுள்​ளது. பாலாஜி மோஷன் பிக்​சர்ஸ் சார்​பில் ஏக்தா கபூர் தயாரிக்கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு விரை​வில் தொடங்க இருக்​கிறது. நடிகை தமன்​னா, இந்​தி​யில் உருவாகும் வி.​சாந்​தா​ராமின் பயோபிக் படத்​தில் அவர் மனைவியாக நடித்து வருகிறார்​.

ஆமிர் கான் மகனுடன் த்ரில்​லர் படத்​தில் நடிக்கிறார் தமன்னா!
‘‘பிஎன்பி வென்றதில் அல்ல... ஜாமாத் இ இஸ்லாமி தோற்றதில்தான் மகிழ்ச்சி!’’ - தஸ்லிமா நஸ்ரின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in